logo

logo

பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம் தமிழக அரசால் 1997ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்ட விதிகளின்படி நிறுவப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவால் 12(பி) மற்றும் 2(எப்) தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் தேசிய தகுதி மற்றும் தரச்சான்றிதழ் நிறுவனம் 2015ஆம் ஆண்டு “ஏ” சான்று வழங்கி சிறப்பித்துள்ளது. சமூகப் போராளியும் சீர்த்திருத்தவாதியுமான “தந்தை பெரியார்” என அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் நினைவாக இப்பல்கலைக்கழகம் பெரியார் என பெயர் பெற்று விளங்குகிறது. இப்பல்கலைக்கழகம் அறிவால் விளையும் உலகு என்ற முழக்கத்தின்படி மாணவர்களின் தரமான கல்வி அறிவினையும் அவர்களின் உயர்கல்வி வாய்ப்பினையும் உறுதி செய்கிறது. உலக நாடுகள் பலவற்றுடன் இணைந்து கல்விசார் வளர்ச்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொண்டுவருகிறது.

பன்னாட்டு கருத்தரங்கம்

இக்கருத்தரங்கத்தின் உள்நோக்கம் பொருட்களின் வளர்ச்சி, பல்வேறு பண்புகள், மீநுண் தொழில் நுட்பம் உள்ளிட்ட கூறுகள் அறிவியல், தொழில் நுட்பத்தின் சாதகமான கூறுகள் பற்றிய எதிர்பார்ப்பு ஆகியவற்றை எடுத்துரைப்பதாகும். மாணவர்கள், புகழ்பெற்ற அறிவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் தொடர்பு கொள்ள இது ஒரு சிறந்த தளமாக இருக்கும். இது தொழில் சார்ந்த பயன்பாடுகளைப்பற்றிய அண்மைக் கால ஆராய்ச்சியை பகுத்தறிந்து புதிய பாதைகளைத் திறக்கும். மேலும் தொழிலதிபர்களுக்கும் சமூகத்திற்கும் உதவும் வகையில் புதிய விளைப்பொருட்களை கண்டுபிடிக்கவும், செயல்முறைகளை எளிதாக்கவும், இக்கருத்தரங்கம் ஒரு நேர்த்தியான வழியைத் திறக்கும். முதல் சர்வதேச மாநாடு பெரும் வெற்றி பெற்றது. மேலும் முதல் சர்வதேச மாநாட்டில் பல அறிவியலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் அறிவியல் ஆய்வினை பகிர்ந்து சிறப்பித்தனர்.

இளவேனில் மற்றும் ista பற்றி

"இளவேனில்" ஆனது ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞான மற்றும் பொறியியல் துறைகளிலுள்ள பல்வேறு நிபுணர்களை கொண்ட அமைப்பாகும். இது கல்லூரி/பல்கலைக்கழக மாணவர்களிடையே குறிப்பாக கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்காக மாநாடுகள்/கருத்தரங்குகள்/செய்முறை விளக்கங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதில் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. இவ்வமைப்பின் ஒரு பகுதியாக செயல்படும் இளவேனில் பதிப்பகமானது "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி பத்திரிகை" என்ற இதழ் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகின்றன. மேலும், "இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டமைப்பு (ISTA)" என்ற அமைப்பும் இளவேனில் உடன் இணைந்து இளவேனில் வெளியீடுகள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சினை தமிழில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பல்வேறு பணிகளை செய்வதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

© 2018 Periyar University, Salem. All rights reserved | Design by Vivek!...